undefined

நெகிழ்ச்சி... 40 பயணிகளின் உயிரை காத்து மயங்கிய அரசு பேருந்து ஓட்டுனர்!! 

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து நேற்று பிற்பகலில் கீழ்குந்தா கிராமத்திற்கு அரசுப்பேருந்து வழக்கம் போல் கிளம்பியது. இந்த பேருந்தை சிவா வயது 48  என்ற ஓட்டுனர் இயக்கினார். சிவா   கீழ்குந்தா கிராமத்தில் வசித்து வருபவர். இந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து   குன்னூர் - மஞ்சூர் இடையே சென்று  கொண்டிருந்தது.திடீரென ஓட்டுநர் சிவா சோர்வடைந்து பேருந்தை மெதுவாக இயக்கினார்.

உடல்நிலையில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.  திடீரென மயக்கமும்  வருவதையும் உணர்ந்து  பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார்.  ரத்த அழுத்தம் அதிகமாகி இருக்கையிலேயே மயங்கி சாய்ந்தார். உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுனரை  அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.மருத்துவமனையில் ஓட்டுநர் சிவாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  


உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதை உணர்ந்த ஓட்டுநர் சிவா துரிதமாக செயல்பட்டு, உடனடியாக சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தினார். இதனால்  பேருந்தில் இருந்த 40 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.  பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. இச்செயல் பயணிகளிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பேருந்தில் பயணம் செய்தவர்கள் அவருக்கு நன்றி கூறி விடைபெற்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை