undefined

வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மாயம்.. கதறும் பெற்றோர்கள்.. போலீசார் தீவிர விசாரணை!

 
ஜெயப்ரியா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தரணி மற்றும் பிரியா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு 5 வயது மகனும், ஜெயப்ரியா என்ற 3 வயது மகளும் உள்ளனர். இதற்கிடையில், நேற்று இரவு குழந்தைகள் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், பிரியா வீட்டிற்குள் சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தபோது, ​​அவரது 3 வயது குழந்தை ஜெயப்ரியா காணாமல் போனது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, தரணி, அவரது மனைவி பிரியா மற்றும் அவர்களது உறவினர்கள் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், எங்கும் குழந்தையை காணாததால், குழந்தை காணாமல் போனது குறித்து குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தாலுகா போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போன குழந்தையை போலீசார் மற்றும் அவர்களது உறவினர்கள் தேடி வருகின்றனர். குழந்தையை யாராவது கடத்திச் சென்றார்களா? அல்லது குழந்தை வழி தெரியாமல் வேறு எங்காவது சென்றாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!