இன்று இரவே ஆட்டம் ஆரம்பம்... அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, புறநகர் பகுதிகளில் மழை!
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதையடுத்து சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் இன்று இரவே மழை தன் ஆட்டத்தை துவங்க உள்ளது. அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று நாளை இந்த மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!