undefined

ஜி20 மாநாடு... பிரதமர் மோடி 6 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம்!

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் நவம்பர் 16ம் தேதி முதல் நவம்பர் 21ம் தேதி வரை 6 நாட்கள் நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்குப் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடி நவம்பர் 16-17 தேதிகளில் நைஜீரியா செல்கிறார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.

அதனைத் தொடர்ந்து பிரேசில் நாட்டில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி நவம்பர் 18-19 தேதிகளில் கலந்து கொள்கிறார். ஜி20 மாநாட்டையொட்டி அங்கு பல உலக தலைவர்களை மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு நவ.19-21 தேதிகளில் கயானா செல்கிறார் பிரதமர் மோடி.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!