பார்லிமென்ட்டில் டான்ஸ் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!
நியூஸிலாந்து நாட்டில் 22 வயதேயான இளம் பெண் எம்பி, நாடாளுமன்றத்தில் மசோதாவை எதிர்த்து வித்தியாசமான முறையில் நடனமாடி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், உலகளவில் அவர் மீது கவனத்தை ஈர்க்க செய்துள்ளது.
நியூசிலாந்து நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வைதாங்கி உடன்படிக்கையில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக நியூஸிலாந்தின் ஆளும் கூட்டணியான ACT கட்சி பார்லிமெண்ட்டில் சட்ட திருத்த மசோதாவை முன்மொழிந்தது.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பிற்கு நேற்று நியூஸிலாந்து பார்லிமெண்டுக்கு அழைப்பு விடுத்தது. வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்ட வர வாக்கெடுப்பு நடைபெற்ற போது, நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடிகளான மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம்பெண் எம்பியான ஹனா-ரவ்ஹிதி, பார்லிமெண்டில் மாவோரிகளின் நடனத்தை ஆடி மசோதாவுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
பார்லிமெண்டில் திடீரென இளம்பெண் எம்.பி., ஒருவர் நடனமாடிய போது அரங்கம் மொத்தமும் அதிர்ந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!