undefined

மகளிடமே அத்துமீறிய கணவன்... கொலைச் செய்த தாய் மீதான குற்றத்தை ரத்து செய்தது நீதிமன்றம்!

 

தனது மகளிடமே அத்துமீறிய கணவனைக் கொலைச் செய்த தாய் மீதான கொலைக் குற்றத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், ஐபிசியின் 97வது பிரிவு, பாலியல் குற்றங்களில் இருந்து தங்களைக் தற்காத்துக் கொள்ள கொலை செய்பவர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் தந்தை தனது 21 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

அப்போது மகளை காப்பாற்றுவதற்காக தாய் மரக்கத்தியால் கணவரை குத்தியுள்ளார். ஆனால் அதற்கு கட்டுப்படாத தந்தை மீண்டும் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த மகளின் தாய் சுத்தியலால் தலையில் அடித்ததில் கணவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது தலையில் காயம், புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், தற்காப்புக்காக அந்தப் பெண் கொலையைச் செய்ததாகக் கண்டறிந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அடங்கிய தனி நீதிபதி அமர்வு, பெண் மீது 302வது பிரிவின் கீழ் கொலைக்குற்றம் சாட்டுவது தவறு என்று தீர்ப்பளித்தது. மேலும் அந்தப் பெண்ணின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்தது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா