undefined

நோயாளி உயிருடன் விளையாடிய பிரபல மருத்துவமனை.. தவறுதலாக நடந்த அறுவை சிகிச்சை.. அடுத்து நடந்த சோகம்!

 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வில்லியம் பிரையன் (70), பெவர்லி பிரையன் ஆகியோரும் வசித்து வந்தனர். இந்நிலையில் வில்லியம் பிரையனுக்கு இடது வயிற்றின் கீழ் பகுதியில் வலி ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக வால்டன் கவுண்டியில் உள்ள அசென்ஷன் சேக்ரட் ஹாட் எமரால்டு கோஸ்ட் மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மண்ணீரலில் பிரச்னை இருப்பதாகவும், அதை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர். மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் தாமஸ் ஷாச்னோவ்ஸ்கி மற்றும் டாக்டர் கிறிஸ்டோபர் பகானி ஆகியோர் அவரது குடும்பத்தினரையும் அறுவை சிகிச்சை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனால் அவரது குடும்பத்தினர் அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை நிபுணர் மண்ணீரலுக்குப் பதிலாக கல்லீரலை தவறுதலாக அகற்றினார். இதனால் அவருக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது .

இந்த அறுவை சிகிச்சையின் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனை மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது அவரது மனைவி பெவர்லி பிரையன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லியம் பிரையனின் வயிற்று வலிக்கு காரணம் அவரது மண்ணீரலில் ஒரு சிறிய நீர்க்கட்டி என்று  கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை