உயிரிழந்த உரிமையாளருக்காக 4 மாதமாக காத்திருக்கும் நாய்.. காண்போரை கலங்க வைத்த காட்சி...!!
Nov 5, 2023, 15:14 IST
உயிரிழந்த உரிமையாளருக்காக 4 மாதங்களாக காத்திருக்கும் நாயின் செயல் பார்ப்போர்களின் கண்ணை கலங்க வைத்துள்ளது.
கேரளா மாநிலம் கன்னூரில் உள்ள பிணவறை வாசலில் நாய் நம்பிக்கையுடன் காத்திருக்கும் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு நெட்டிசன்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அதன் உரிமையாளர் பிணவறைக்கு அழைத்துச் செல்லப்படுவதைக் கண்ட நாய் அங்கேயே நின்றதாகக் கூறப்படுகிறது.
"உரிமையாளர் இன்னும் இங்கே இருப்பதாக நாய் உணர்கிறது. நாய் இந்த இடத்தை விட்டு வெளியேறவில்லை & கடந்த நான்கு மாதங்களாக இங்கே உள்ளது," என்று பிரதிநிதி மேலும் கூறினார்.