undefined

பரபரப்பில் திமுக... ஆளுநருக்கு எதிரான வழக்கு... இன்று மீண்டும் விசாரணை!

 

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்து வந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் கடந்த 10ம் தேதி இந்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்ததாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியது. மனுக்களை கிடப்பில் போட்டு அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்கி வைக்கிறார் என்றும் பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது.

இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் எப்போது அளிக்கப்பட்டது,  எவ்வளவு நாட்கள் நிலுவையில் உள்ளன என்பதை நீதிபதிகள் கேட்டறிந்தனர். தமிழ்நாடு அரசு எழுப்பி பிரச்சினைகள் கவலைக்குரியது என்று நீதிபதிகளுக்கு அரசு தெரிவித்த நிலையில் ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம்,  ஒருவேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.  ஆனால் எதுவுமே செய்யாமல் கிடப்பில் போட முடியாது அரசியல் சாசனப்படி மசோதாக்கள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டவுடன் ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்தனர்.

இந்நிலையில் எந்த வித காரணமும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு 10 மசோதாக்களை கடந்த 13ம் தேதி ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்பினார்.  அதனை தொடர்ந்து சிறப்பு சட்டமன்ற கூட்டம் நேற்று முன்தினம் கூட்டப்பட்டு,  ஆளுநர் திருப்பி அனுப்பி பத்து மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டன.

பத்து மசோதாக்களிலும் ஒரு புள்ளி, கமா கூட சேர்க்காமல், திருத்தப்படாமல் அப்படியே அன்றைய தினமே மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் மசோதாக்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் தாக்கல்  செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!