மரண ஓலம்... பெரும் சோகம்... ஆப்கானிஸ்தானில்  கனமழைக்கு ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

 

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மேகவெடிப்பு மழை காரணமாக ஒரே மாநிலத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
வடக்கு ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக எழுந்த திடீர் வெள்ளம் குறைந்தது 200 உயிர்களைக் கொன்றதா ஐநா சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அங்கு பெய்த கனமழை காரணமாக பாக்லான் மாகாணத்தின் ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாகவும் ஐநா தெரிவித்துள்ளது.
தலிபான் தரப்பு அதிகாரியான ஹெதயதுல்லா ஹம்தார்ட், முதற்கட்ட கணக்கின்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் என 62 பே கனமழையால் பலியானதை உறுதி செய்தார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் ஹம்தார்ட் தெரிவித்துள்ளார். "தேசிய இராணுவம் மற்றும் காவல்துறையினரை உள்ளடக்கிய மீட்பு படையினர் சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது” எனவும் அவர் தெரிவித்தார். 

 

 

ஆப்கானிஸ்தான் அடிப்படையில் காலநிலை உணர்திறன் கொண்ட தேசமாகும். ஆப்கானிஸ்தானில், ஏப்ரல் மாதத்தில் இதேபோன்ற பேரழிவுகள் ஏற்பட்டன. அப்போது கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக குறைந்தது 70 பேர் இறந்தனர். கடந்த மாத வெள்ளம் சுமார் 2,000 வீடுகள், மூன்று மசூதிகள் மற்றும் நான்கு பள்ளிகளை அழித்தது. மேலும் ஆயிரக்கணக்கானோருக்கான மனிதாபிமான உதவிகளை கோரியது. இவற்றோடு விவசாய நிலங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. 2,500க்கும் மேலான விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!