தொண்டரை காலால் எட்டி உதைத்த கொடூரம்.. பாஜக மூத்த தலைவர் வெறிச்செயல்!
மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. தற்போது இந்த 3 கட்சிகளின் தலைவர்களும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று அரியணை ஏற வேண்டும் என தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராவ் சாகேப் தன்வே, சிவசேனா கட்சியின் முன்னாள் அமைச்சர் அர்ஜுன் கோட்கரை சந்தித்து பேசினார்.
குறிப்பாக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, சிவசேனாவில் செயல்பட்டு வருபவர், ``ராவ்சாகேப் தன்வேக்கு கால்பந்து வழங்க வேண்டும். பாஜகவில் பணியாற்றும் தொண்டர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுமா? அவர்கள் யோசிக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கிடையில், ராவ்சாகேப் தன்வேயால் உதைக்கப்பட்ட நபர் கூறுகையில், “நான் ராவ்சகேப்பின் நெருங்கிய நண்பன். இருவருக்கும் 30 வருட நட்பு. அவர் எட்டி உதைத்ததாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. ராவ்சகேப்பின் சட்டையை சரி செய்ய முயற்சித்தேன்,'' என்றார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!