விஜய் போட்டியிட போகும் தொகுதி.. முதல் மாநாடும் அங்கு தானாம்.. எங்கு தெரியுமா..?

 

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராகத் திகழும் தளபதி விஜய் பிப்ரவரி 2ஆம் தேதி தனது "தமிழக வெற்றிக் கழகம்" கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும்  படத்தை முடித்துவிட்டு தனது திரையுலக வாழ்க்கையை முடிக்கப் போவதாகவும் தெரிவித்தார். தனது 69வது படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் இணையவுள்ள தளபதி விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.பாஜகவின் அண்ணாமலை, திமுகவின் உதயநிதி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என தெள்ள தெளிவாக அறிவித்திருந்தார். இதன்படி, 2026 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி அல்லது நாகை தொகுதியில் போட்டியிட விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மண்டலத்தில் முதலில் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார். முதல் மாநாடு நெல்லை அல்லது தூத்துக்குடியில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முதல் மாநாட்டிலேயே கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி  கொடியை அறிமுகப்படுத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளார். முக்கியமாக கட்சி கொள்கைகள் வெளியிடுவார் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி விவகாரம் குறித்து தெரிந்து கொள்ள அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க