undefined

பகீர்... அரசுப்  பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர்... !

 

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சிறமடத்திற்கு இயக்கப்பட்டுவரும் அரசு பேருந்தில்  தினமும் ஏராளமான மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து  நடத்துநர்  அந்த பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.  

அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்ததை கூறினார்.  மாணவியின் பெற்றோர், ஊர் மக்களுடன் சேர்ந்து மீண்டும் அந்த பேருந்து  ஞானையாபுரம் வந்த போது பேருந்தை சிறைபிடித்து   நடத்துனரை பிடித்து அடிக்கத் தொடங்கினர்.

இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடத்துநரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீசாா் நடத்திய விசாரணையில் அரசு நடத்துநர் உண்ணாமலைக்கடையை சேர்ந்த 54 வயது சசி  என்பது தெரியவந்தது. அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர். அத்துடன் அவர் மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!