வாக்கு சேகரிக்க வந்த முதல்வர்.. திடீரென கேள்வி எழுப்பிய பெண்ணால் அதிர்ச்சி!

 

ஈரோட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை உழவர் சந்தை பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டவாறு பொதுமக்களிடையே திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்க்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலை ஓரத்தில் கடைவைத்து காய்கறி விற்பனை செய்து வரும் விஜயா என்பவர், முதல்வரை அணுகி பேசினார்.

அப்போது முதல்வரிடம் பேசிய அவர், தனக்கு மகளிர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார். உரிய காரணமின்றி தன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.

மேலும்,  "எனது கணவர் அரசுப் பணியாளர் அதனால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் (கணவர்) சாப்பிட்டால் மட்டும் போதுமா எனக்கு வயிறு நிறைந்து விடுமா?" என முதல்வரிடம் அந்தப் பெண் கேள்வி எழுப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்