மகளிருக்கு மத்திய அரசின் தீபாவளி பரிசு... இன்று துவங்குகிறது “ஜல் தீபாவளி” திட்டம்!

 

இன்று மத்திய அரசு, ‘ஜல் தீபாவளி’ திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இந்த தீபாவளி பண்டிகைக்கு மத்திய அரசின் மகளிருக்கான பரிசு என்று இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.    குறிப்பாக பெண்களுக்கு நன்மை பயக்கும் வகையில்  ”Women for Water, Water for Women” என்ற திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.   இதன்படி  நீர் மேலாண்மை குறித்து பெண்கள் போதிய அறிவு பெற வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி குடும்பம் நடத்த பெண்களின் பங்கு அவசியமாகிறது.  தண்ணீர் குறித்து  இவர்களுக்கு போதிய  அறிவை வழங்கினால் ஒட்டுமொத்த சமூகமும் சிறப்பான முறையில் செயல்பட வழிவகுக்கும் என மத்திய அரசு கருதுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பெண்கள் அவரவர் நகரங்களில் உள்ள நீர் நிர்வகிக்கப்படும் மையங்களுக்கு நேரில் அழைத்து செல்லப்பட்டு  நீர் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது? நீர் சுத்திகரிப்பு எப்படி நடக்கிறது? தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் ஒவ்வொரு வீடுகளுக்கும் எப்படி விநியோகம் செய்யப்படுகிறது? போன்ற விவரங்கள் நேரடியாக காட்டப்படும். அத்துடன்  தண்ணீரின் தரத்தை பரிசோதிக்கும் வழிமுறைகளும் விளக்கப்படும்.

இந்த திட்டத்தில் அனைத்து பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என கேள்வி எழலாம். இல்லை.  இத்திட்டத்தை ஜல் தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் எனவும் அழைக்கின்றனர்.
இத்திட்டம் நாளை நவம்பர் 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை  செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்படுவர் . மேலும் இத்திட்டம்  சரியாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கவனிக்க அம்ருத், தேசிய நகர்ப்புற வாழ்வாதார மிஷன் அமைச்சகத்தின் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!