undefined

பைக் மீது அதிவேகமாக மோதிய கார்.. ரேபிடோ ஊழியர் பரிதாபமாக பலியான சோகம்!

 

மதுரவாயல் பைபாஸ் சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரேபிடோ ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை பாண்டி பஜார் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் (39). ரேபிடோ (பைக் டாக்சி) நிறுவனத்தில் பணிபுரியும் இவர், நேற்று மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த சொகுசு கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், சுமார் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். தகவலின் பேரில் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, தப்பி ஓடிய கார் டிரைவர் முரளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!