undefined

அட கொடுமையே... கஞ்சா வழக்கில் கைதானவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோட்டம்!

 

தமிழகம் முழுவதுமே கஞ்சா விற்பனையும், கடத்தலும் அதிகரித்துள்ள நிலையில், போலீசார் துணை இல்லாமல் இப்படி கஞ்சா விற்பனையும், நடமாட்டமும் அதிகரிக்க முடியாது என்று பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புடிச்ச குற்றவாளியையும் காவல் நிலையத்தில் இருந்து படங்களில் வருவதைப் போல தப்பித்து செல்ல கோட்டை விட்டிருக்கிறார்களே என்று மீம்ஸ்களைத் தெறிக்க விடுகின்றனர். வேலூர் காட்பாடியை அடுத்த தாராபடவேடு குளக்கரையைச் சேர்ந்தவர் 22 வயதான காமேஷ். கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி அவரை காட்பாடி போலீஸார் கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில், காமேஷ் காவல் நிலையத்தில் இருந்து கைவிலங்குடன் ஓடிவிட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. குறிப்பாக, தமிழகத்தின் சிறந்த காவல் நிலையங்களில் காட்பாடி காவல் நிலையம் ஒன்று. அப்படிப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து கைதி கைவிலங்குடன்  தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மாவட்டக் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, 10க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். காவல் நிலையம் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் தொடர்ந்து சோதனை நடத்தினர். இந்நிலையில், தப்பி ஓடிய காமேஷ், காட்பாடியை அடுத்த கசம் பகுதி மலையடிவாரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் காமேசஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா