undefined

 அதிர்ச்சி... பிளாஸ்டிக் டப்பாவில் பச்சிளங்குழந்தையை அடைத்து வீசிச் சென்ற கொடூரம்!

 
 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பிறந்து சில நாட்களான பச்சிளங்குழந்தையை பிளாஸ்டிக் டப்பா ஒன்றினுள் அடைத்து அந்த பகுதியில் இருந்த தென்னந்தோப்பில் வீசி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்லது. தென்னந்தோப்பில் இப்படி குழந்தையை வீச்சிவிட்டுச் சென்ற கொடூர மனம் படைத்தவர்களைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஆண்டிக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் துணை ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு அருகிலேயே குணபாலன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக பொதுமக்கள் கடந்து சென்றுக் கொண்டிருந்த போது, தென்னந்தோப்பில் பிளாஸ்டிக் டப்பா ஒன்றினுள் பச்சிளைங்குழந்தை அடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக இது குறித்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, பிறந்து சில நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் அந்த பிளாஸ்டிக் டப்பாவினுள் அடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. 

அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உடலைக் கைப்பற்றிய போலீசார்  பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து பச்சிளங்குழந்தையை டப்பாவினுள் அடைத்து வீசிவிட்டுச் சென்றவர்களை  தேடி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!