பள்ளி மாணவியை சொந்த அத்தையே பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்... !
பள்ளி விடுமுறை நாட்களுக்கு உறவினர்களுக்கு மாணவ , மாணவிகளை அனுப்பி வைப்பர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் குறிப்பாக பெண்குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு தனியாக அனுப்ப கூடாது. ஓ.எம்.ஆர் சாலை பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் தனது மகளை பள்ளி விடுமுறைக்கு தங்கை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். மாணவி 10 ம் வகுப்பு கோடை விடுமுறையில் சென்றுள்ளார். அங்கு சென்ற மாணவியை அவரின் சொந்த அத்தையே மிரட்டி கட்டாய்ப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.
முதல் கட்டமாக ரூ. 10,000 பெற்றுக்கொண்டு சென்னை கோயம்பேட்டில் வேளச்சேரிக்கு இளைஞர் ஒருவருடன் ஆட்டோவில் அனுப்பி வைத்தார்.
அந்த இளைஞர் அந்த மாணவியை தனது வீட்டில் 5 நாட்கள் வைத்திருந்து மீண்டும் மீண்டும் பாலியல் சித்ரவதை செய்துள்ளார். ஒவ்வொரு வாரமும் அதே போல் ஒவ்வொரு நபரிடமும் பணம் பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்துள்ளார். கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி பெற்றோரிடம் செல்ல வேண்டும் என அடம்பிடிக்கத் தொடங்கினார். இதனை தொடர்ந்து வேறு வழியின்றி மாணவியை அவரின் வீட்டுக்கு அத்தை அனுப்பி வைத்துவிட்டார். அங்கு சென்ற சில நாட்களிலேயே மாணவிக்கு தொடர் வாந்தி, மயக்கம் என உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை மாணவியிடம் இதுகுறித்து விவரம் கேட்டுள்ளார். அப்போது மாணவி அத்தையின் செயல்கள் குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் அத்தை மற்றும் துணையாக இருந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர். மகளை தனது தங்கையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை அறிந்த மாணவியின் தந்தை தங்கையை சராமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அவரையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. பாதிக்கப்பட்ட மாணவி குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க