பட்டய கிளப்பும் வீர தீர சூரன் ... தரமான ‘சம்பவம்!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் ‘சீயான்’ விக்ரம். இவரது நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம் பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்து நீதிமன்ற தடைகளை தாண்டி நேற்று மாலை 6 மணிக்கு மேல் தான் உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது. காலையில் டிக்கெட் வாங்கி காத்திருந்த ரசிகர்கள் மாலை காட்சியை தான் பார்க்க முடிந்தடு.
5 மார்க்கிற்கு 3,4 என மதிப்பீடு அளித்து வருகின்றனர். படத்தின் எதார்த்தமான களம், அதனை படமாகிய விதம் என அனைத்தும் பாராட்டப்படுகிறது. முக்கியமாக விக்ரமின் நடிப்பு அபரிமிதமாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷின் இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது என்றும், ஒரு குறிப்பிட்ட 15 நிமிட சிங்கிள் ஷாட் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது என்றும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். ஒரு கதைக்காக உடலை வருத்தி உடல் எடையை ஏற்றி இறக்கி அந்த கதாபாத்திரத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்பவர் நடிகர் விக்ரம். தற்போது அதிலிருந்து விலகி பழைய கமர்சியல் ஹீரோ தூள் பட விக்ரம் போல இந்த படத்தில் ரசிகர்களுக்காக நடித்துள்ளார். நீண்ட வருடங்களாக கமர்சியல் வெற்றிக்காக போராடிவரும் விக்ரமிற்கு இந்த படம் மிக் பெரிய கம்பேக்காக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!