undefined

டீரிட் கொடுக்க மறுத்த சிறுவன்.. ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொன்ற நண்பர்கள்.. பகீர் பின்னணி!

 

ஷகர்பூர் பகுதியில் புதிய போன் வாங்கியதற்காக ட்ரீட் கொடுக்க மறுத்த 16 வயது சிறுவனை மூன்று சிறுவர்கள் கத்தியால் குத்திக் கொன்றனர். ஷகர்பூர் பகுதியில் நேற்று மாலை, சச்சின் என்ற 16 வயது சிறுவன், நண்பனுடன் புதிய போன் வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில், மூன்று சிறுவர்கள் சச்சினிடம் புதிய போன் வாங்கியதைக் கொண்டாட ஒரு பார்ட்டி கொடுக்குமாறு கேட்டுள்ளனர். சச்சின் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் சண்டையாக மாறியதையடுத்து, சிறுவன் ஒருவர் சச்சினை கத்தியால் குத்தினார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். போலீசார் அளித்த தகவலின்படி, "சிறுவர்கள் ஒரு சிறுவனை கத்தியால் குத்தியதாக அப்பகுதியினர் எங்களுக்குத் தெரிவித்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எல்என்ஜிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நாங்கள் பரிசோதித்தபோது உடலில், முதுகில் இரண்டு குத்தப்பட்ட காயங்களைக் கண்டோம் என தெரிவித்தனர்.

தரப்பினர் புதிய செல்போன் கேட்டதில் ஏற்பட்ட தகராறே கத்திக்குத்துக்கான காரணம் என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, குற்றம் நடந்த பகுதி மற்றும் உள்ளூர் புலனாய்வுக் குழுவினரின் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி மூன்று சிறார்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலை ஆயுதமும் கைப்பற்றப்பட்டது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!