வலுக்கட்டாயமாக சிறுவனுக்கு போதை ஊசி போட்டு அட்ராசிட்டி.. இளைஞரை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ரத்தினமங்கலம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நித்யானந்தம் மகன் ராகுல் (15) தற்போது 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். கோடை விடுமுறை நாளான இன்று ராகுல் விளை நிலத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு வாலிபர்கள் ராகுலிடம் போதை ஊசியை காட்டி ஊசி போட்டால் நன்றாக இருக்கும் என பிடிவாதம் பிடித்தனர்.
ராகுல் ஊசி போட மறுத்ததால், இரண்டு இளைஞர்கள் அவரை கட்டாயப்படுத்தி போதை ஊசி போட்டுள்ளனர். உடனே சிறுவன் ராகுல் கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் ராகுலை மீட்டு இளைஞர்களை விரட்டினர். அப்போது ஒரு வாலிபர் ஓடிவிட்டார். ரத்தினமங்கலம் கிராமத்தில் மற்றொரு வாலிபரை பொதுமக்கள் பிடித்து மின்சார வயரில் கட்டி அப்பகுதி மக்கள் திரண்டு வந்து சரமாரியாக தாக்கினர்.
ஊரக காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து அந்த இளைஞரை விசாரித்ததில் அவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் ஆரணியில் உள்ள காஞ்சிபுரத்தை சேர்ந்த உறவினர் வீட்டுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். போலீசார் இளைஞரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆரணி அருகே இளைஞரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!