undefined

காமராஜரை கொச்சைப்படுத்தும் வகையில் புத்தகம்.. திமுக பேச்சாளரை கைது செய்ய கோரிக்கை!

 

காமராஜரை கொச்சைப்படுத்தும் வகையில் புத்தகம் வெளியிட்ட திமுக பேச்சாளர் ராஜீவ் காந்தியை கைது செய்ய வேண்டும் என காமராஜர் சிவாஜி கணேசன் பொதுநல இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில்  திமுக இளைஞரணி அலுவலகத்தில் வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பேச்சாளர் ராஜீவ் காந்தி என்பவர் எழுதிய கர்மவீரரும் கலைஞரும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் பெருந்தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான காமராஜரையும் அவருடைய திட்டங்களையும் அவருடைய தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதுமாகவும் காமராஜரை சாதிய அடையாளப்படுத்தி வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது.  

மேலும் காமராஜரை விட கலைஞர் அதிக பள்ளிக்கூடங்களை திறந்தார் என அந்த புத்தகத்தில் உள்ளது. எனவே காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த புத்தகத்தை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும். திமுக பேச்சாளர் ராஜீவ் காந்தியை கைது செய்ய வேண்டும். அவரை திமுகவை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமான வலியுறுத்தி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் காமராஜர் சிவாஜி கணேசன் பொதுநல இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!