அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து ரோட்டில் எரித்த கொடூர சம்பவம்.. அதிர வைக்கும் பின்னணி..!!

 

ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் மயானத்தில் நபர் ஒருவரின் சடலம் அடக்கம் செய்ய அனுமதிக்காத சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

 மேர்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகலில் சேக் ஃபால் என்று பெயரிடப்பட்ட 31 வயது நபரின் உடல், மத்திய செனகல் நகரமான கயோலாக்கில் உள்ள லியோனா நியாசென் கல்லறையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது. (அவர் எப்படி இறந்தார் என்று தகவல்கள் இல்லை). உள்ளூர் ஊடகங்களின் அறிக்கைபடி, இறந்த அந்த நபரின் குடும்பத்தினர் அருகிலுள்ள டூபா என்ற இடத்தில் அவரை அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். இது இஸ்லாமிய மவுரைடு சகோதரத்துவத்தின் புனித நகரமாகும், ஆனால் இறந்த அந்த நபர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் அவரது சொந்த ஊரில் அவரை அடக்கம் செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து வேறு வழியின்றி, அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மயானத்தில் ரகசியமாக அடக்கம் செய்துள்ளனர். இருப்பினும், 24 மணி நேரத்திற்குப் பிறகு, அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பெரும் கூட்டத்தால் நடுரோட்டில் தீ வைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் LGBTQ+ எதிர்ப்பு மனப்பான்மை பரவலாக இருந்தாலும், இந்த சம்பவம் செனகலில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

செனகல் நகர செய்தித்தாள் ஒன்றி அளித்த தகவலின்படி, கடந்த சனிக்கிழமை மாலை இறந்த Kaolackன் உடல் தனிநபர்களால் தோண்டி எடுக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், அந்த சம்பவம் தொடர்ந்து எதிர்வினைகளைத் தூண்டுகின்றன என்று கூறியுள்ளது. மேலும் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் நடந்த பகுதியான லியோனா நியாசெனின் கலிஃப் ஜெனரல், ஒரு செய்திக்குறிப்பில் தனது "ஆழ்ந்த கோபத்தை" வெளிப்படுத்தியுள்ளார். 

மேலும் இந்த விஷயத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ள மதத் தலைவர் ஒருவர் "ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த கொடூர செயல் கண்டிக்கத்தக்க செயல்" என்று கண்டனம்  செய்துள்ளார். ஆப்பிரிக்காவில் Gay திருமணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் அங்கு ஓரினசேர்கையாளர்களுக்கு எதிராக பல குற்றங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.