பெரும் சோகம்... 51 நாட்களுக்கு பிறகு சீனாவிலிருந்து குமரி  கொண்டுவரப்பட்ட மருத்துவ மாணவி உடல்... கதறிய பெற்றோர்... !

 

குமரி மாவட்டம் இடைக்கோடு புல்லந்தேரி பகுதியில் வசித்து வருபவர்  55 வயது  கோபாலகிருஷ்ணன்.  ஜவுளி வியாபாரியான  இவருடைய ஒரே மகள் ரோகிணி. இவர் சீனாவில் மருத்துவம் படித்து வந்தார்.  இந்த மாதம் அவரது மருத்துவ படிப்பை நிறைவு செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்ப தயாராக இருந்த நிலையில் மகளின் வரவை பெற்றோரும் எதிர்பார்த்து காத்து கிடந்தனர்.  


இந்நிலையில் ரோகிணி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாக கோபால கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.    ரோகிணி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு ரத்த அணுக்கள் குறைந்து, சிகிச்சை மற்றும் மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து டிசம்பர் 12ம் தேதி மருத்துவமாணவி சீனாவிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.   மாணவியின் பெற்றோர் மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர், தமிழக அரசு மற்றும் மத்திய வெளியுறவுத்துறை  அமைச்சர்  ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

ரோகிணி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டன. சட்ட சிக்கல்கள் காரணமாக மாணவியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டது. ஏஜென்சி மூலம் சீனா சென்ற மாணவியின் உடலை திரும்ப கொண்டு வர பல லட்சம் ரூபாய் செலவாகும் எனக் கூறியது.  ஏற்கனவே மகளின் படிப்பிற்கு அதிக செலவு செய்து விட்டதால் மீண்டும் பல லட்சம் ரூபாய் செலவிடும் சூழல் இல்லை என பெற்றோரும்  தவித்து வந்தனர்.  இறுதியாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின்  தீவிர முயற்சியின் பேரில்  51 நாட்களுக்கு பிறகு மாணவியின் உடல் இந்தியாவில் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது.  பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு  ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட மாணவியின் உடல் நேற்று இரவு சொந்த ஊரான இடைக்கோடுக்கு  வந்தடைந்தது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க