400 வருடங்களாக அழியாத உடல்... புனித சவேரியாரின் உடல் காட்சிப்படுத்தப்பட்ட... பொதுமக்கள் ஜன.5 வரை பார்க்கலாம்!
இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்பிய புதிய பிரான்சிஸ் சவேரியார் கடந்த 1552 டிசம்பர் 3ம் தேதி சீனாவில் உள்ள சாங்சோங் தீவில் காலமானார்.
அதன் பின்னர் 1553 டிசம்பர் மாதம் இந்தியா கொண்டு வரப்பட்ட புனித சவேரியாரின் அழியாத உடல் கோவாவில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுவது வழக்கத்தின் இருந்து வருகிறது.
தற்போது புனித சவேரியாரின் உடல் மற்றும் அவரது புனித நினைவுச் சின்னங்கள் பொதுமக்கள் பார்வைக்காக கோவா கதீட்ரல் தேவாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் 2025 ஜனவரி 5ம் தேதி வரை பொதுமக்கள் புனித சவேரியாரின் உடலைப் பார்வையிடலாம். இந்த விழா நேற்று கோவாவில் தொடங்கியது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்சார வாகனத்தில் குழந்தை யேசு பேராலயத்தில் இருந்து புனித கதீட்ரல் தேவாலயம் வரை புனித சவேரியாரின் நினைவுச் சின்னங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழைய கோவாவில் திரண்டனர்.
இந்த விழாவில் ஒரு கர்தினால், நான்கு பேராயர்கள், ஆயர்கள் மற்றும் 500 பாதிரியார்கள் கலந்து கொண்டனர். புனித சவேரியாரின் உடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புனித கதீட்ரல் தேவாலயத்தில் ஜனவரி 4ம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஹென்ரி பால்கோ தெரிவித்தார்.
புனித சவேரியாரின் உடலைக் காண சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோவா வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!