நவம்பர் ஆரம்பமே அதிரடி... தமிழகத்தில் மீண்டும் கனமழை... காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது!
நாளை நவம்பர் மாதம் துவங்க உள்ள நிலையில், நவம்பர் மாதத்தின் துவக்கமே அதிரடியாக உள்ளது. வழக்கத்தை விட இந்த வருடம் வடகிழக்குப் பருவமழை 60 சதவீதம் வரையில் அதிகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் முதல் வாரத்தின் இறுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தின் இறுதியில் உருவாகும் காற்றழுத்தத தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பிருப்பதால் நவம்பர் 7ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வார காலமாக பல்வேறு மாவட்டங்களிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, மதுரை, சேலம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகை, கும்பகோணம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது சென்னை மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!