undefined

  பிறந்து ஒரு மாசம் தான் ...  குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண்குழந்தை!  

 


தமிழகத்தின் தலைநகர் சென்னை நந்தனம் சி.ஐ.டி நகர் 4 வது பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று இரவு 8 மணி அளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அருகில் உள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் கலியபெருமாள் என்பவர் சென்று பார்த்துள்ளார்.

அப்போது குப்பைத்தொட்டியில் ஒரு மாத பெண் குழந்தை கிடந்தது தெரியவந்தது.உடனடியாக  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் இருந்த  சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்ட போது, ஒரு வயதான பெண்ணும் அவருடம் இளம்பெண்ணும் வந்து குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது. அவர்கள் யார் என்பது குறித்து  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை