நடிகையை கொச்சையாக பேசிய விவகாரம்... பகிரங்க மன்னிப்பு கேட்க நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தன்னைப் பற்றி கொச்சையாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த முன்னாள் அதிமுக நிர்வாகி ராஜூவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸைப் பெற்ற அடுத்த 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். கூடவே நஷ்ட ஈடாக தொகையையும் கேட்டிருக்கிறார். நஷ்ட ஈடாக எவ்வளவு தொகை கேட்டிருக்கிறார் என்பதை மறைத்துவிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் வக்கீல் நோட்டீஸைப் பகிர்ந்திருக்கிறார் த்ரிஷா.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜூ, நடிகை த்ரிஷா குறித்து அவதூறு பரப்பும் விதமாக ஆபாசமாக பேசியிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்து, விஜய், அஜித், கமல் என த்ரிஷாவுடன் சேர்ந்து நடித்த நடிகர்கள் யாரும் தங்களது கண்டனங்களைத் தெரிவிக்காத நிலையில், முதல் ஆளாக இயக்குநரும், நடிகருமான சேரன் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், “கவனம் பெறுவதற்காக எந்த நிலைக்கும் தரம் தாழ்ந்து போவர்களைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது” என நடிகை த்ரிஷா தனது வேதனையை வெளிப்படுத்தினார். மேலும், இதனை சட்டரீதியாக தான் சந்திப்பேன் எனவும் கூறினார். சொல்லியபடியே, இன்று ராஜூவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் த்ரிஷா.
அதில், 'இந்த நோட்டீஸை பெற்ற 24 மணி நேரத்திற்குள் என்னிடம் ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதுமட்டுமல்லாது தமிழ், ஆங்கில செய்தித்தாள்களில் விளம்பரமும், தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோவும் வெளியிட வேண்டும். அப்படி செய்யாவிட்டால், மானநஷ்ட வழக்குத் தொடருவேன். சமூகவலைதளங்கள் உள்ளிட்டவைகளில் என்னை பற்றி பேசிய கருத்துகள் அடங்கிய அனைத்து பதிவுகளையும் ராஜு அவருடைய சொந்த செலவில் நீக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!