undefined

 ”ஃபால்ஸ் நியூஸ்ங்க... ” வெற்றி துரைசாமி குறித்து  குடும்பத்தினர் விளக்கம்...!

 

சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் விபத்தில் சிக்கி அவர் மாயமாகி இருப்பதாக நேற்று மாலை முதல் செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சைதை துரைசாமி அதிமுகவின் மூத்த பிரமுகர். இவரது மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இமாச்சல் பிரதேசம் சுற்றுலா சென்ற போது சட்லெஜ் ஆற்றில் அவரது இன்னோவா கார் பாய்ந்ததாகவும், அதில் ஓட்டுனர் பலியானதாகவும் செய்திகள் வெளீயாகின.

அத்துடன் அவரது நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் வெற்றி துரைசாமியை தேடும் படலம் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இச்செய்தி தவறானது வெறும்வதந்தி என சைதை துரைசாமி குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். காரில் பயணித்தவர்களில் சென்னையைச் சேர்ந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி பெயரும் குறிப்பிட்டு அவரது சென்னை முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது.இத்தகவலால்  சைதை துரைசாமியின் நண்பர்கள் வட்டாரத்திலும் அரசியல் வட்டாரங்களிலும் அதிர்ச்சி ஏற்பட்டது.

சட்லஜ் நதியில் ஓரிரு நாட்களுக்கு முன் ஒரு விபத்து நடந்தது உண்மைதான். அந்த சம்பவத்திற்கும் சைதை துரைசாமி மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர்.  இது குறித்து இன்று பிப்ரவரி 5ம் தேதி காஐ  சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் குடும்பப் பிரமுகர் ஒருவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்   “ஒன்னும் இல்லைங்க. அது ஃபால்ஸ் நியூஸ் தான். அதில் உண்மை இல்லைன்னு நாங்களும் இப்ப விளக்கம் கொடுக்கப்போறோம். இந்த செய்தி தவறானது ”   எனக் கூறியுள்ளார். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க