undefined

தஞ்சாவூர் கூட்டு பலாத்கார விவகாரம்.. 17 வயது சிறுவர் உட்பட 2 பேர் அதிரடியாக கைது!

 

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாட்டில் 23 வயது நிரம்பிய இளம் பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பாப்பநாடு பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதுவரை நான்கு பேரை கைது செய்துள்ளனர்  இது தொடர்பாக பல்வேறு கட்சியினர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிறகு இரு சக்கர வாகனத்தில் ஆறு இளைஞர்கள் ஆற அமர சாவகாசமாக செல்லும் சிசிடி காட்சிகள்  வெளயாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது இதனை அடுத்து மேலும் 17 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மேலும் பூதாகரமாக வெடித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை