’தளபதி 69’ பட பூஜை பட கிளிப்பிங்க்ஸ்!
தமிழ் திரையுலகின் இளைய தளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாகப் போகிறது தளபதி 69. இந்த திரைப்படத்தின் பூஜை நேற்று அக்டோபர் 4ம் தேதி சென்னையில் நடைபெற்றது. பூஜை தொடங்கியதை அடுத்து, இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பும் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் பூஜையில் இயக்குநர், தயாரிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பீஸ்ட் படத்திற்கு பிறகு பூஜா ஹெக்டே தளபதி 69 படம் மூலமாக விஜய்யுடன் ஜோடியாக நடிக்கிறார் . ரசிகர்கள் ஆர்வமுடன் இந்த ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க காத்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகை மமிதா பைஜுவும் விஜய்க்கு தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது. அனிமல் படத்தில் வில்லனாக மிரட்டிய பாபி டியோல் தளபதி 69 படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.
தி கோட் படத்தின் பூஜை விழாவில் டீ-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து கலந்து கொண்ட விஜய், தளபதி 69 படத்திற்காக வேட்டி-சட்டை அணிந்து வந்திருந்தார். வெகு விரைவில், விக்கரவண்டியில் த.வெ.க கட்சியின் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், தன் அரசியல் பயணத்தை எந்த திட்டத்துடன் தொடங்கப்போகிறார் என்பது குறித்து தொண்டர்கள் பலரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!