undefined

 அதிகாலையில் பயங்கரம்... பேருந்து மீது கார் மோதி கோர விபத்து... 5 பேர் பலி.. முதல்வர் இரங்கல்!

 
 

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 4 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் மல்லவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பின்னர் வீட்டிற்குத் திரும்பி காரில் சென்றுக் கொண்டிருந்த போது, சாலையின் சந்திப்பில் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கார் பயங்கர வேகத்தில் மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. பேருந்தில் திருமண விழாவைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 4 பேர் உடனடியாக சிகிச்சைக்காக லக்னௌவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த துயர சம்பவத்திற்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி உத்தரவிட்டார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!