பாகிஸ்தானில் பயங்கர தாக்குதல்.. 42பேர் பலியான சோகம்.. பலர் படுகாயம்!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்த சிலர் நேற்று பிரசினார் நகரில் இருந்து பெஷாவர் நோக்கி கார் மற்றும் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் குர்ரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு காரில் வந்த கும்பல் பேருந்து மற்றும் காரை வழிமறித்தது. பின்னர் மக்களை நோக்கி அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த கொடூர தாக்குதலில் 42 பேர் பலியாகினர். சிலருக்கு காயமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த அனைவரும் ஷியா பிரிவைச் சேர்ந்த பொது மக்க என்பது தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!