கோவில் திருவிழாவில் பயங்கரம்... பட்டாசு வெடித்ததில் 154 பேர் படுகாயம்; 8 பேர் கவலைக்கிடம்!
கேரள மாநிலம் நீலேஸ்வரம் அருகே உள்ள அஞ்சுதம்பலம் வீரராகவ கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டதில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், 8 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கேரள மாநிலத்தில் அஞ்சுதம்பலம் வீரராகவ கோயிலில் நேற்றிரவு நடைபெற்ற காளியாட்ட திருவிழாவின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், அருகில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டைகள் மீது தீப்பொறி விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறி அந்த இடமே களேபரமானது. கோயில் திருவிழாவின் போது அந்த பகுதியில் அதிகளவில் பக்தர்கள் கூடியிருந்த நிலையில், இந்த வெடிவிபத்தில் சிக்கினர். பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்து சிதறியதில் மக்கள் பலரும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்தில் 154 பேர் காயமடைந்துள்ள நிலையில், 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காசர்கோடு மாவட்ட காவல்துறை அதிகாரி டி.ஷில்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோயில் கமிட்டி தலைவர் மற்றும் செயலர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பட்டாசு வெடித்த இடமும், பட்டாசுகள் வைத்திருந்த பகுதியும் அருகருகே இருந்தது. பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த இடத்தில் தீப்பொறி விழுந்ததே விபத்துக்குக் காரணம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
வாணவேடிக்கையின் போது குழந்தைகள், பெண்கள், பெரியோர்கள் என ஏராளமானோர் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் மொத்தமாக வெடித்து சிதறியதில் அருகில் இருந்த மக்கள் மீது விழுந்தது. மக்களும் அங்கிருந்து சிதறியடித்து ஓடியதில் பலர் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!