undefined

ஜம்மு காஷ்மீரில் பதற்றம்.. மீண்டும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்.. உ.பி தொழிலாளர் படுகாயம்!

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

உத்திரபிரதேச மாநிலம் பிஜ்னூரைச் சேர்ந்த சுபம் குமார் (19) என்பவர் காயமடைந்தவர். அதிகாரிகளின் கூற்றுப்படி, டிராலில் உள்ள பத்குண்ட் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவரது கைகளில் தோட்டா காயம் ஏற்பட்டது. இதையடுத்து குமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த 20ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள கட்டுமான தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் மருத்துவர் மற்றும் 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதேபோல் கடந்த 18ம் தேதி ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!