உண்டியலில் இருந்து திருடும் கோவில் பூசாரிகள்... அதிர்ச்சி வீடியோ!
இது குறித்து வெளியான வீடியோவில், கோவில் பூசாரிகளும் அதிகாரிகளும் இணைந்து பணத்தை திருடுவது தெளிவாக பதிவாகியுள்ளது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இணையத்தில் பலரும் இந்த வீடியோ தொடர்பாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டை போல கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும் என்று பலரும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய ராமச்சந்திரா, “கோவில் பணத்தை திருடிய 2 செயற்குழு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 2 சமையல்காரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எதிர்காலத்தில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் நன்கொடை எண்ணும் பணியில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
பக்தர்களின் காணிக்கைகளை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் கோயில் நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது. ஆஞ்சநேய ஸ்வாமிக்கு காணிக்கை செலுத்தும் போது பக்தர்கள் பயப்பட தேவையில்லை. பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை மோசடி செய்யவோ, திருடவோ வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!