கோயில் திருவிழாவில் பரபரப்பு... பிளேடால் பெண் போலீசாரின் கையைக் கிழித்த போதை ஆசாமி!
சென்னை ராயப்பேட்டையில், கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரை பிளேடால் வெட்டிய சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயப்பேட்டை விஎம் தெருவில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற திருவிழாவின் போது சிலர் மதுபோதையில் தள்ளாடிக் கொண்டு இருந்துள்ளனர். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அறிவுறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த மதுபோதை கும்பலில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் கவுசல்யாவின் வலது கையில் வெட்டியுள்ளார். இதையடுத்து, காயமடைந்த பெண் காவலர் கவுசல்யாவை, பணியில் இருந்த மற்ற காவலர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு பெண் காவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கையில் 5 தையல்கள் போடப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்த ஸ்ரீதர், அஜய், கிஷோர், சசி ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், பெண் காவலரை பிளேடால் வெட்டியது அஜய் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!