இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை... அதிர்ச்சி தகவல்!
தகவல் பரிமாற்ற செயலிகளில் முண்ணனியில் இருந்து வரும் டெலிகிராம் செயலி குற்றச்செயல்களுக்கு துணை புரிவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் டெலிகிராம் நிறுவனர் பாவெல் ஆகஸ்ட் 24ம் தேதி பாரிஸில் கைது செய்யப்பட்டார். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த கைது சம்பவம் ஏற்படுத்தியது. அதன்படி மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்டம் போன்ற மோசமான செயல்களுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுகிறதா என்பதை இந்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில் இந்தியாவில் டெலிகிராம் ஆப் பயன்பாட்டை தடை கூட செய்யலாம். மத்திய அரசின் உள்துறை மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒரு பகுதியாக உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் என்ற சிறப்புக் குழு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது. எலான் மஸ்க் மற்றும் எட்வர்ட் ஸ்னோடென் போன்ற சில பிரபலங்கள் இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தடை விவகாரத்தில் தீவிர விசாரணைக்கு பிறகே இறுதி முடிவுகள் எடுக்கப்படும். டெலிகிராம் இந்திய அரசின் விதிகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் அரசிடம் முறையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
39 வயதான பாவெல் துரோவ் ரஷ்யாவில் VKontakte என்ற மிகவும் பிரபலமான சமூக ஊடக தளத்தை 2007ல் தொடங்கினார். இவர் பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்குடன் ஒப்பிடப்பட்டார். 2014 ஆம் ஆண்டில் ரஷ்ய அரசாங்கம் உக்ரைனில் அதிக சுதந்திரத்தை விரும்பும் மக்களைப் பற்றிய தகவல்களைத் தர வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாக துரோவ் கூறினார். மக்கள் ஆன்லைனில் என்ன செய்ய முடியும் என்பதில் அரசாங்கம் கடுமையாக இருந்ததால், துரோவ் VKontakte என்ற சமூக ஊடக தளத்தின் தனது பங்குகளை விற்றுவிட்டு ரஷ்யாவை விட்டு வெளியேறிவிட்டார். தனது 28 வயதில் தனது சகோதரர் நிகோலாயுடன் இணைந்து டெலிகிராம் என்ற புதிய செயலியை உருவாக்கினார்.
துரோவ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் குடிமகனாக இருக்கிறார். டெலிகிராம் மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு தனிப்பட்ட, நம்பகமான செயலியாக இருக்க வேண்டும் என பாவெல் துரோவ் விரும்புகிறார். ஆனால் சில தொழில்நுட்ப வல்லுநர்கள் இவை மோசமான செயல்பாடுகளுக்கு வழி வகுக்கும். தீவிரவாத செயல்கள், பிளாக் மார்க்கெட் இதன் மூலம் வளரும் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
டெலிகிராம் செயலியில் நடக்கும் மோசமான செயல்களை கண்காணிக்க தவறியதால் துரோவ் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மக்களை ஏமாற்றுதல், போதைப்பொருள் விற்பனை செய்தல், ஆன்லைனில் மற்றவர்களை கொடுமைப்படுத்துதல் மற்றும் கடுமையான குற்றங்களுக்கு உதவுதல் ஆகிய குற்றங்கள் டெலிகிராம் மூலம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகள் விதிகளை பின்பற்றாத சமூக ஊடக கணக்கு நிறுவனத்திற்கு அபராதமும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!