undefined

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் பரிதாப பலி.. அதிர வைக்கும் பின்னணி!

 

சென்னை புளியந்தோப்பு தட்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (22). கடந்த 2 வருடங்களாக போதைக்கு அடிமையான இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசி போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் நண்பர்களுடன் சேர்ந்து தட்டாங்குளம் விளையாட்டு மைதானம் அருகே போதை ஊசி போட்டுள்ளார். மயங்கி விழுந்த கோகுலை அவரது நண்பர்கள் மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

வீட்டில் இருந்த அவரது தாயாரிடம் கோகுல் தட்டான்குளம் பொதுக் கழிப்பறையில் மயங்கி விழுந்து கிடந்ததாகவும், அவரைப் பார்த்து வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர். இதற்கிடையில், அதிர்ச்சியடைந்த தாய், கோகுல் மயங்கி கிடந்ததை கண்டு, உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

அங்கு, கோகுலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்து, உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலின் நண்பர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் சமீப நாட்களாக போதை ஊசியால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புளியந்தோப்பு பகுதியில் சதீஷ் (22) என்ற வாலிபர் போதை ஊசி போட்டு இறந்த சோகம் நடந்தது. இதேபோல், 2023 நவம்பரில் சூளை பகுதியைச் சேர்ந்த ராகுல் (19) என்பவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ராயப்பேட்டையில் உள்ள தனியார் லாட்ஜில் போதை ஊசியால் உயிரிழந்தார். சமீபத்தில் போதை ஊசி பயன்படுத்திய 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்