undefined

இளம்பெண்ணிடம் செல்போன் பறிக்க முயற்சி... 3 வாலிபர்கள் கைது!

 


தூத்துக்குடி மாட்டத்தில் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் சம்பவத்தன்று மத்திய அரசு ஊழியர் குடியிப்பு பகுதியில் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்றுக் கொண்டிருந்த போது ஒரு மோட்டார் பைக்கில் வந்த 3 பேர் செல்போனை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டதால் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டார்களாம். 

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கருணாநிதி நகரை சேர்ந்த கார்த்தி (24), சத்யா நகரை சேர்ந்த பாரதி (25), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் (20) ஆகியோர் பெண்ணிடம் செல்போனை பறிக்க முயன்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

 

 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

 

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!