சான்றிதழ் வாங்க வந்த மாணவனை விளாசித் தள்ளும் ஆசிரியர்கள்... பகீர் வீடியோ!
இந்தியாவில் மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11ம் வகுப்பில் படித்து வந்த மாணவன் தேர்வில் தோல்வியுற்றதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட மாணவன் முடிவு செய்தான். அதன்படி பள்ளிக்கு சென்ற மாணவன் தனக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளான்.
தொடர்ச்சியாக தாக்குதலுக்கு ஆளான மாணவன் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஆசிரியர்களை தள்ளி விட்டுள்ளான். பள்ளியில் இருதரப்பும் மோதிக் கொண்ட விவகாரத்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே ஆசிரியர்களால் தாக்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். சிகிச்சைக்கு பிறகு, காவல் நிலையத்தில் ஆசிரியர்கள் மீது புகார் அளித்தான். இதே போன்று பள்ளி தலைமை ஆசிரியர் தரப்பிலும் மாணவன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஹஜிரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!