undefined

ஆசிரியரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த கொடூரம்.. 2 பள்ளி மாணவர்கள் அதிரடியாக கைது!

 

ஆசிரியரின் புகைப்படத்தை  செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட மாணவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் ஆசிரியர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் பணிபுரிந்த அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களை கைது செய்தனர்.  மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆசிரியரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடக குழுக்களில் வெளியிட்டது விசாரணையில் தெரியவந்தது.

விசாரணை நடந்து வருவதாகவும், சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படங்களை அகற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!