undefined

குடும்ப வறுமையால் தவித்த ஆசிரியர் குடும்பம்.. அடுத்த நொடியே ஓடோடி வந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி!

 

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தனக்குக் கற்பித்த ஆசிரியரின் குடும்பம் வறுமையில் வாடுவதை அறிந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒரு உடனடியாக விரைந்து வந்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரன் பெங்களூரில் வசித்து வருகிறார்.

இவர் திண்டுக்கல் செயின்ட் மேரிஸ் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தபோது, ராமசாமி என்ற தமிழ் ஆசிரியர் அவருக்கு 7 மற்றும் 8 ஆம் வகுப்பு ஆசிரியராக இருந்தார். ஆசிரியர் ராமசாமி ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் இவரது மனைவி பட்டு மற்றும் மகன்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

அவர்கள் வறுமையில் வாடுவதாக பாலச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வறுமையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியையின் மனைவி பட்டுவுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை நேரடியாக சென்று வாங்கி வந்தார். மேலும், பட்டுவின் பேரன் சரவணனிடம் ரூ.45 ஆயிரம் கொடுத்து கறவை மாடு வாங்கி, அதில் வரும் வருமானத்தில் பாட்டியை நன்றாக கவனித்துக் கொள் என கூறி சென்றார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!