undefined

இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை... நேற்றே குவிந்த ‘குடி’ மகன்கள்!

 
நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கடைபிடிக்கப்பட்டு வரப்படுகிறது. தேசப்பிதாவை கொண்டாடி அவரது தியாகத்தை நினைவுகூறும் விதமாக இத்தினத்தைக் கடைப்பிடிக்கிறோம். ஆனால், இன்னமும் சுய ஒழுக்கம் இல்லாமல் டாஸ்மாக் கடைகளுக்கு சட்டம் போட்டு ஒரு நாள் மூடும் நிலையில் தான் இருக்கிறோம். இன்று காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மதுபானக் கடைகளையும், பார்களையும், தனியார் சொகுசு ஹோட்டல் பார்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான பாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைப்பதற்காக ‘குடி’மகன்கள் நேற்று மாலை முதலே டாஸ்மாக் கடைகளில் குவிந்ததால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. 

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று அக்டோபர் 2ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான பிரியர்கள் இன்று மதியம் முதலே டாஸ்மாக் கடைகளைத் திறந்ததும், குவிந்து, இருப்பு வைத்துக் கொள்வதற்காக கைநிறைய சரக்கு பாட்டில்களை அதிகளவில் வாங்கி சென்றதைக் காண முடிந்தது. பல இடங்களில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. 

இந்நிலையைக் கண்ட பொதுமக்கள், காந்தி ஜெயந்திக்கு டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டு என்ன பிரயோஜனம். இன்று குடிப்பதற்காக நேற்று மாலை முதலே இரவு கடையை மூடும் வரையில் பல இடங்களிலும் குடிமகன்கள் அதிகளவிலான மதுபான பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் வழக்கமான விற்பனையைவிட அதிகளவில் நேற்றே இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களை திருந்த தானே நினைக்க வேண்டும். அதற்கு பதிலாக அதிகம் குடிப்பதற்கு வழிவகைச் செய்வதைப் போல தான் அரசு செயல்படுகிறது என்று புலம்பிச் சென்றனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், டாஸ்மாக் விஷயத்தில் காட்சிகள் எதுவும் மாறவில்லை என்பதே  பொதுமக்களின் புலம்பலாக இருக்கிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!