இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.... மதுப்பிரியர்களுக்கு குஷி!
டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் அதிரடி மாற்றம் அமலுக்கு வருகிறது. தமிழக அரசு சார்பாக டாஸ்மாக் கடைகள் இன்று முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது மதுப்பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இனி டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களுக்கு இன்று முதல் பில் வழங்கப்படுவது நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலமாக அரசுக்கு வருடத்திற்கு ரூ.45,000 கோடி வருமானம் வருகிறது. தோராயமாக நாளொன்றுக்கு டாஸ்மாக் கடைகளில் தமிழகம் முழுவதும் ரூ.120 கோடிக்கு மது விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி, பொங்கல் தொடர் விடுமுறை போன்ற விசேஷ நாட்களில் ஒரு நாளின் மதுவிற்பனை ரூ.150 கோடியைத் தாண்டிவிடும்.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூலித்து வருவதாகவும், பீர்களுக்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளது. இந்த பணம் யாருக்குச் செல்கிறது என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று கணக்கிட்டால் தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் இப்படி கள்ளத்தனமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க தற்போது டாஸ்மாக் நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
அனைத்து மதுபாட்டில்களிலும் கியூ ஆர் கோடு பதிப்பது, ஸ்கேனர் இயந்திரம் வழங்குது என டிஜிட்டம் மயமாக்க ரெயில் டெல் நிறுவனத்திற்கு ரூ.294 கோடிக்கு இது தொடர்பாக ஏற்கனவே ஆர்டர் வழங்கப்பட்டது.
சோதனை அடிப்படையில் அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றிகரமான நிலையில் அடுத்தக்கட்டமாக தற்போது சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நேற்று முதல் பில் வழங்குவது அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளில் பழைய மதுபான பாட்டில்கள் அதிகளவு இருப்பதால் அதனை விற்பனை செய்து விட்டு இன்று முதல் (15.11.2024) கியூ ஆர் கோடு மூலம் பதிவு செய்து பில் வழங்கும் முறையை இன்று முதல் செயல்படுத்த டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று முதல் சென்னை புறநகர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த புதிய நடைமுறை காரணமாக சரக்கு இருப்பு மற்றும் விற்பனை செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் உடனுக்குடன் அதிகாரிகளால் பெற முடியும். இந்த டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறை மூலமாக இனி பணம் கொடுத்து வாங்குவது, யுபிஐ சேவை, கார்டு பயன்படுத்தி பணம் செலுத்துவது நடைமுறைக்கு வந்துள்ளது. அதே சமயம் பில்லில் உரிய பணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இதன் மூலம் இனி கூடுதலாக பணம் வசூலிக்கும் போக்குக்கு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதம் இந்த திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!