undefined

வீடுகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை... இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்!

 

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி இந்து மகா சபை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மில் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை பொது மக்கள், மாணவ_ மாணவியர் நலன் கருதி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், நாசரேத் பேரூராட்சி 4 வது வார்டு மணிநகர் பகுதியில் பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் சாலைகளை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கே.வி.கே. சாமி சிலை அருகே இந்து மகா சபை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மகா சபை மாநில துணைத் தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். மாநில செயலாளர் சேர்மத்துரை முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். மாநில தலைவர் சுந்தரவேல் சிவசேனா, மாநில அமைப்பாளர் சசிகுமார் உள்பட பலர் பேசினர். 

ஆர்ப்பாட்டத்தில் சக்திகுமார், மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜகோபால், மாநில இளைஞரணி செயலாளர் மாரிமுத்து, தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் பவன், மாவட்ட செயலாளர் புதியராஜ், வாகன ஓட்டுநர் பிரிவு மாவட்ட தலைவர் சங்கரசுப்பு, மாவட்ட செயலாளர் சேகர், ஆறுமுகநேரி நகர தலைவர் செந்தில்வேல், நகர தலைவர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் பாலையா, ஆழ்வை ஒன்றிய தலைவர்ரமேஷ், செயலாளர் மகாராஜன்,  பொதுச்செயலாளர் லிங்கம், சாத்தை ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் பாலமுருகன், செயலாளர் கிருஷ்ணகுமார், சாமிதுரை, சக்திவேல், குணம், பாலன், பொன்ராஜ், குருசாமி, மாரியப்பன், கோபி, சுயம்புராஜா, முத்து, மணிகண்டன், சங்கர், ஹரீஷ், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!