இன்று தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு!
இன்று அக்டோபர் 2ம் தேதி தமிழகத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக்கடைகளையும், பார்களையும், சொகுசு ஹோட்டல் பார்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ‘குடி’மகன்கள் நேற்று மாலை முதலே கைக்கொள்ளாமல் சரக்கு பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள துவங்கிய காட்சிகளும் அரங்கேறியது.
இன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதுபான பிரியர்கள் நேற்று முதலே டாஸ்மாக் கடைகளில் குவிந்து இருப்பு வைத்துக் கொள்வதற்காக கைநிறைய சரக்கு பாட்டில்களை வாங்கிச் சென்றனர். காந்தி மண்டபத்தை சுத்தம் செய்த தமிழக ஆளுநர், காந்தி மண்டப வளாகத்தில் இருந்து காலி மதுபாட்டில்களை கண்டெடுத்தது குறிப்பிடத்தக்கது. தமிழகம் போதையில் தள்ளாடும் ஒரு தலைமுறையை உருவாக்கி வருகிறது என்பதை நாம் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். அடுத்த தலைமுறையினருக்காவது விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!