உத்தரகாண்ட் நிலச்சரிவில் மீட்கப்பட்ட தமிழர்கள் ஓரிருநாட்களில் விமானம் மூலம் தமிழ்நாடு திரும்புவர்!
உத்தரகாண்ட் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் விரைவில் தாயகம் திரும்புவர் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழர்கள் சிக்கி கொண்டனர். அதன்படி ஆதிகைலாஷ் யாத்திரைக்கு சென்ற கடலூர் சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்த 30 தமிழர்கள் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் தாவாகாட் பகுதியின் அருகில் சிக்கினர் என்பது குறித்து தகவல் பெறப்பட்டதும் முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் உத்தரகாண்ட் அரசை தொடர்பு கொண்டு சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில், கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளை கண்காணித்தனர். உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள 30 தமிழர்கள் காயம் ஏதுமின்றி, அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் முகாம் அலுவலகத்திலிருந்து உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள தமிழர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, கவலைப்பட வேண்டாம் . தைரியமாக இருங்கள் . அவர்களை விரைந்து மீட்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என பேசியுள்ளார்.
யாத்திரை சென்ற தமிழர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுத்துவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து, உத்தரகாண்ட் அரசால் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு முகாமில் உள்ள 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்கள் அனைவரும் தர்சுலா நகரத்திற்கு அழைத்து வரப்பட்டதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட பயணிகள் அங்கே ஓரிரு நாட்கள் தங்கி, பின்னர் டெல்லி வந்து விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு திரும்பி வருவர்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!