undefined

 ஃபெஞ்சல் புயல்... குடியரசு தலைவர் தமிழகம் வருகை ரத்து!

 

 
தமிழகத்தில் இன்று நவம்பர் 30ம் தேதி திருவாரூா் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 9வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் 34 போ் தங்கப்பதக்கம், 22 போ் முனைவா் பட்டம் என 614 போ் பட்டம் பெற உள்ளனா். பல்கலைக்கழக வேந்தா் கோ. பத்மநாபன் தலைமையில் நடைபெறும் விழாவில்  குடியரசுத் தலைவரும், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக மேன்மையருமான திரௌபதி முா்மு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அவர் இவர்கள் 34 பேருக்கும் தங்கப்பதக்கமும் பட்டங்களையும் வழங்கிப் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதனையொட்டி திருவாரூரில் 3 அடுக்கு பாதுகாப்புடன் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். திருவாரூா் நகரம், மத்திய பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்  போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.  கூடுதலாக தமிழ்நாடு பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனா்.


இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள ஃபென்ஜால் புயல் காரணமாக, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தா் கோ. பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அனைவருக்கும் பட்டங்களை வழங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!